பெண் உதவி இயக்குனர் காலி பணியிடங்கள் – மாதம் ₹ 50,000 மேல் சம்பளம் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் 11 உதவி இயக்குனர் (பெண்கள்) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) 18 ஜூலை 2022 அன்று அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த 11 உதவி இயக்குனர் (பெண்கள்) காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும்.
சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) காலி பணியிடங்கள்
பதவியின் பெயர் | உதவி இயக்குநர் |
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை | 11 |
சம்பளம் | ₹ 56,100 – ₹ 2,05,700 (நிலை – 22) |
முக்கியமான நாட்கள்
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் | 16 ஜூலை 2022 |
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் | 16 ஆகஸ்ட் 2022 |
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் | 05 நவம்பர் 2022 |
விண்ணப்பக் கட்டணம்
தேர்வுக் கட்டணம் | ₹ 200 |
நிரந்தர பதிவுக் கட்டணம் (One-time Registration Amount) | ₹ 150 |
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுத் திட்டம்
கணினி வழி கொள்குறி வகைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மொத்தம் 510 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
பாடம் | நேரம் | அதிகபட்ச மதிப்பெண் | தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் மதிப்பெண் | ||
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர் | மற்றவர்கள் | ||||
முதுகலை பட்டப்படிப்பு தரநிலை – 200 கேள்விகள் தாள் 1 மனையியல் உளவியியல் சமூகவியல் குழந்தை வளர்ச்சி அறிவியல் உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் மறுவாழ்வு அறிவியல் சமூகப்பணி அறிவியல் | 3 மணி நேரம் | 300 | 153 | 204 | |
தாள் II பகுதி அ தமிழ் மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம்) (100 கேள்விகள்/150 மதிப்பெண்கள்) | 3 மணி நேரம் | குறிப்பு: குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் – 60 மதிப்பெண்கள் (150இல் 40%). மதிப்பெண்கள் பகுதி அ-இல் தாள்-II-இல் பெறப்பட்ட மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து இறுதி தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. | |||
பகுதி ஆ பொது அறிவு (100 கேள்விகள்/150 மதிப்பெண்கள்) பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) – 75 கேள்விகள் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம்)
| 150 | ||||
நேர்முகத்தேர்வு | 60 | ||||
மொத்தம் | 510 |
குறிப்பு:
- தாள் II-இன் பகுதி அ-இல் தேர்வர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெறவில்லை எனில், தேர்வர்களின் தாள் I மற்றும் தாள் II-இன் பகுதி ஆ-இன் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
- தாள் I மற்றும் தாள் II இன் பகுதி ஆ ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தேர்வு நடைமுறை
உதவி இயக்குனர் காலி பணியிடங்களுக்கு இரண்டு தொடர்ச்சியான நிலைகளில் தேர்வு செய்யப்படும்.
அதாவது
- கணினி அடிப்படையிலான தேர்வு
- நேர்காணலின் வடிவத்தில் வாய் மொழி தேர்வு
இந்த காலி பணியிடங்களுக்கான இறுதித் பட்டியல் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணலின் வடிவத்தில் வாய் மொழி தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு வெளியிடப்படும்.
விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணலின் வடிவத்தில் வாய் மொழி தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்று இருத்தல் அவசியம்.
வயது வரம்பு
01 ஜூலை 2022 அன்றுள்ளபடி, 32 வயது நிறைவடைந்தவர் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
கல்வித் தகுதி
மனையியல், உளவியியல், சமூகவியல், குழந்தை வளர்ச்சி அறிவியல், மறுவாழ்வு அறிவியல், சமூகப்பணி அறிவியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்.