டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் 4,300 உதவி ஆய்வாளர் (SI) காலி பணியிடங்கள் - எஸ்.எஸ்.சி 2022 அறிவிப்பு » raceinstitute.in

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் 4,300 உதவி ஆய்வாளர் (SI) காலி பணியிடங்கள் – எஸ்.எஸ்.சி 2022 அறிவிப்பு

TNPSC Group IV Exam - Educational qualification, Age limit, Salary details, Promotions, Selection Procedure, Written Exam syllabus, and pattern and apply link
Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TNPSC Group 4 Overview

டெல்லி காவல்துறை (Delhi Police) மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் (Central Armed Police Force (CAPF)) 4,300 உதவி ஆய்வாளர் (Sub Inspector – SI) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி)/Staff Selection Commission (SSC) 10 ஆகஸ்ட் 2022 அன்று அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://ssc.nic.in)  வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை அந்தந்த காலி பணியிடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் நியமித்து வருகிறது. மத்திய ஆயுத காவல் படைகள் (Central Armed Police Force (CAPF)) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 4,300 உதவி ஆய்வாளர் (Sub Inspector – SI) காலி பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) 10 ஆகஸ்ட் 2022 அன்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.  இத்தேர்விற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30 ஆகஸ்ட் 2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Group 4 Notification 2022 Out

The TNPSC Group 4 Notification 2022 has released on 30th March 2022 on the official website of TNPSC

TNPSC recruits eligible candidates for Group 4 posts in departments like Tamil Nadu Ministerial Service, Tamil Nadu Judicial Ministerial Service, Tamil Nadu Survey, and Land Records Subordinate Service, Tamil Nadu Secretariat Service, and Tamil Nadu Legislative Assembly Secretariat Service.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 (தொகுதி – IV), தமிழ்நாடு அமைச்சுப்பணி. தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி. தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இணைய வழி முலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் உதவி ஆய்வாளர் (SI) காலி பணியிடங்கள்

பதவியின் பெயர்         

டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் (ஆண்)

டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் (பெண்)

மத்திய ஆயுத காவல் படைகளில் உதவி ஆய்வாளர்

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

228

112

3,960 (ஆண்கள் – 3791, பெண்கள் – 169)

சம்பளம்           

₹ 35,400 – ₹ 1,12,400 (நிலை – 6, குரூப் சி)

₹ 35,400 – ₹ 1,12,400 (நிலை – 6, குரூப் சி)

₹ 35,400 – ₹  1,12,400 (நிலை – 6, குரூப் பி)

முக்கியமான நாட்கள்

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

10 ஆகஸ்ட் 2022

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் மற்றும் நேரம் 

30 ஆகஸ்ட் 2022 (நள்ளிரவு 11 மணி)

ஆன்லைனில் விண்ணப்பங்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மற்றும் நேரம்

31 ஆகஸ்ட் 2022 (நள்ளிரவு 11 மணி)

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் உதவி ஆய்வாளர் (SI) காலி பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வு

 

நவம்பர் 2022

விண்ணப்பக் கட்டணம்

தேர்வுக் கட்டணம் ₹ 100
பெண்கள், பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) இடஒதுக்கீட்டிற்கு தகுதி உடையவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

01 ஜனவரி 2022 அன்றுள்ளபடி, 20 முதல் 25 வயதுக்குள் (அதாவது, 02 ஜனவரி 1997 தேதிக்கு முன் பிறக்காத விண்ணப்பதாரர்கள்) இருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இத்தேர்வின் மூலம் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

பட்டியல் சாதியினர் (SC) & பட்டியல் பழங்குடியினருக்கு  (ST) ஐந்து (5) ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மூன்று (3) ஆண்டுகளும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பத்து (10) ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி

இத்தேர்விற்கான அனைத்து பதவிகளுக்கும் கல்வித் தகுதியானது, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமான கல்வி நிலையங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு மட்டும்:
ஆண் வேட்பாளர்கள்: இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான (மோட்டார்சைக்கிள் மற்றும் கார்) செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். உடல் சகிப்புத்தன்மை மற்றும் அளவீட்டு சோதனைகளுக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான (மோட்டார்சைக்கிள் மற்றும் கார்) செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத விண்ணப்பதாரர்கள், மத்திய ஆயுத காவல் படைகளில் உள்ள மற்ற எல்லா பதவிகளுக்கும் தகுதியானவர்கள்.

தேர்வு மையங்கள்

தென் மண்டலம் (Southern Region – SR) – தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா

குண்டூர் (8001), கர்னூல் (8003), ராஜமுந்திரி (8004), திருப்பதி (8006), விசாகப்பட்டினம் (8007), விஜயவாடா (8008), காக்கிநாடா (8009), நெல்லூர் (8010), சிராலா (8011), விஜயநகரம் (8012), சென்னை (8201), கோயம்புத்தூர் (8202), மதுரை (8204), சேலம் (8205), திருச்சிராப்பள்ளி (8206), திருநெல்வேலி (8207), வேலூர் (8208), புதுச்சேரி (8401), ஹைதராபாத் (8601), வாரங்கல் (8603), கரீம்நகர் (8604)

தேர்வுத் திட்டம்

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் உதவி ஆய்வாளர் (SI) காலி பணியிடங்களுக்கு மூன்று தொடர்ச்சியான நிலைகளில் தேர்வுகள் இருக்கும். அதாவது, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் உதவி ஆய்வாளர் (SI) காலி பணியிடங்களுக்கு:  

  1. i) கணினி வழி தேர்வு (Computer-Based Examination)
  2. ii) ஆங்கில மொழி அறிவு தேர்வு (English Language & Comprehension)

iii) உடற்தகுதி தேர்வு (Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET))

ஆகிய மூன்று நிலை தேர்வுகளின் மூலம்  காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தாள் 1 - கணினி வழி தேர்வு (Computer-Based Examination)

பாடம்           

மொத்த கேள்விகள்

அதிகபட்ச மதிப்பெண்கள்

நேரம்           

ஆங்கிலம் (General English)

50

50

2 மணி நேரம்

பொது அறிவு (General Awareness),

50

50

திறனறிதல் (General Intelligence & Reasoning)

50

50

கணிதம் (Numerical Aptitude)

50

50

கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு இரண்டு மணி (2 Hours) நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

தாள் 2 - ஆங்கில மொழி அறிவு தேர்வு (English Language & Comprehension)

பாடம்           மொத்த கேள்விகள்அதிகபட்ச மதிப்பெண்கள்நேரம்           
ஆங்கில மொழி அறிவு (English Language & Comprehension)2002002 மணி நேரம்

ஆங்கில மொழி அறிவு தேர்வானது 200 மதிப்பெண்களுக்கு இரண்டு மணி (2 Hours) நேர கால அளவில் நடைபெறும். இதில் 200 வினாக்கள் இடம்பெறும்.

இரண்டு தாள்களிலும் உள்ள வினாக்கள் அப்ஜெக்டிவ் மல்டிபிள் சாய்ஸ் (MCQ) வகையாக இருக்கும்.
முதலாம் தாளின் (தாள் – 1) பகுதி I, II மற்றும் III-இல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெறும்.
முதலாம் மற்றும் இரண்டாம் தாள்களில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marks) அளிக்கப்படும்.

எனவே, தேர்வர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் தாள்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதை மனதில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

How would you like to rate this content?

Was the content helpful?

Want to crack SSC Exams?

JOIN TNPSC Coaching in RACE INSTITUTE TODAY

TNPSC Group IV Syllabus 2022

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.