Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் – March 06, 2024 » raceinstitute.in

Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் – March 06, 2024

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் - TNPSC - March 06, 2024

Dear TNPSC Aspirants,

Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the TNPSC Exam Coaching. Current Affairs section is one of the important Scoring section in the TNPSC Exams like Group I, Group II, Group II-A and Group IV

Veranda Race is committed to provide Daily Current Affairs for all the days for the students who are preparing for TNPSC Exams

Check Daily for the Daily Current Affairs and also for the Quizzes to prepare for the upcoming TNPSC Exams in 2024. 

அன்புள்ள TNPSC தேர்வர்களே,

TNPSC தேர்வு பயிற்சியில் முன்னோடியாக இருக்கும் Veranda Race உடன் இணைந்து தினசரி நடப்பு நிகழ்வுகளுக்கு தயாராகுங்கள். Group 1, Group 2, Group 2-A, Group 4 TNPSC தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் பிரிவு முக்கியமான மதிப்பெண் பிரிவில் ஒன்றாகும்.

TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அனைத்து நாட்களுக்கும் தினசரி நடப்பு நிகழ்வுகளை வழங்க Veranda Race உறுதிபூண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்குத் தயாராக தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் வினாடி வினாக்களுக்கு தினமும் பார்க்கவும்.

Download -Brahma Monthly Current Affairs Magazine

Tamil Nadu News/தமிழ்நாடு செய்திகள்

'Neengal Naalama’ scheme launched in Chennai by Chief Minister of Tamilnadu

 • An innovative programme to contact the beneficiaries and seek their views on welfare schemes will be launched in Chennai.
 • The Hon’ble Chief Minister, Hon’ble Ministers, Chief Secretary, all Secretaries to Government, Heads of Departments and District Collectors will contact the public over telephone and enquire about the benefits of Government schemes.

'நீங்கள் நலமா' திட்டம் தமிழக முதல்வரால் சென்னையில் தொடங்கப்பட்டது

 • பயனாளிகளைத் தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமையான திட்டம் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.
 • இந்த திட்டத்தின் மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆகியோர் அரசுத் திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களைத் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டு அறிவார்கள்.

Pudhumai Penn Scheme has increased number of girl students in higher education by 34%, says CM

 • The Pudhumai Penn scheme which provides Rs 1,000 per month to girl students studying from 6th to plus 2 in schools and pursuing higher studies was launched in September 2022.
 • In the current year, 2.73 lakh girl students are benefited every month under this scheme. As a result of this initiative, the number of girls studying in government schools and joining colleges has increased by 34 percent in the current academic year.

புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரிப்பு என முதலமைச்சர் தகவல்

 • பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் 2022- ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது.
 • இந்தத் திட்டத்தால் நடப்பாண்டில் மட்டும் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த முயற்சியால் நடப்பு கல்வி யாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

National News/தேசிய செய்திகள்

India's first underwater metro rail to be launched in Kolkata

 • PM Modi will inaugurate India’s first underwater metro rail project in Kolkata on 06-03-2024.
 • The Howrah Flyover-Esplanade section is a part of Kolkata’s East-West Metro Corridor.
 • The 520-metre-deep line under the Hooghly river will cover a distance of 520 metres and the train will pass through it in 45 seconds.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் கொல்கத்தாவில் தொடங்கப்படவுள்ளது

 • கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி 06-03-2024 தொடங்கி வைக்கிறார்.
 • கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ வழித்தடத்தின் ஒருபகுதியாக ஹவுரா மேம்பாலம் – எஸ்பிளனேட் பகுதிகளுக்கு இடையே மெட்ரோ ரயில் பாதை தயாராகி வருகிறது.
 • ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 16 மீட்டர் ஆழத்தில், 520 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடத்தில் 45 விநாடிகளில் ரயில் கடந்து செல்லும்.

India reopens export of onion, rice

 • The government had banned the export of non-basmati rice from July 20 last year to meet the domestic demand.
 • The government has allowed the export of non-basmati rice to Tanzania, Djibouti and Guinea Bissau.
 • Similarly, export of onions to UAE and Bangladesh has also been permitted.

வெங்காயம், அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு மீண்டும் அனுமதி

 • உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி முதல் அரசு தடை விதித்தது.
 • இந்நிலையில் தான்சானியா, டிஜிபவுட்டி மற்றும் கினியா பிசாவ் நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
 • இதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்துக்கு வெங்காயகம் ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

PM lays foundation stone and dedicates to nation multiple development projects worth over Rs 19,600 crores in Chandikhole, Odisha

 • Inaugurates Indian Oil Corporation Limited Mono Ethylene Glycol project in Paradip Refinery
 • Inaugurates 0.6 MMTPA LPG Import facility at Paradip and 344 km long product pipeline traversing from Paradip to Haldia
 • Inaugurates 5 MLD capacity seawater desalination plant at Odisha Sands Complex of IREL(I) Ltd

ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

 • பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தின் மோனோ எத்திலீன் கிளைக்கோல் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
 • பாரதீப்பில் ஆண்டுக்கு 0.6 மில்லியன் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இறக்குமதி வசதியையும், பாரதீப் முதல் ஹால்டியா வரையிலான 344 கிலோ மீட்டர் நீள உற்பத்திப் பொருள் குழாய் வழியையும் தொடங்கி வைத்தார்
 • ஐ.ஆர்.இ.எல் (ஐ) நிறுவனத்தின் ஒடிசா மணல் வளாகத்தில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையைத் தொடங்கி வைத்தார் 

International News/உலக செய்திகள்

France has successfully passed a bill to allow women to abort their abortion.

 • Abortion has been legal for women in France since 1974.
 • President Emmanuel Macron vowed to make abortion a fundamental right of women. Accordingly, a bill on the right to abortion was introduced in the French Parliament.
 • Thus the bill was successfully passed. The bill will become law after the president signs it. France has become the first country in the constitution to grant abortion rights.

பிரான்ஸ் நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

 • ஐரோப்பிய நாடான பிரான்சில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய 1974-ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வ அனுமதி உள்ளது.
 • கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார். அதன்படி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு உரிமை குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
 • இதனால் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. அதிபர் கையெழுத்திட்ட பிறகு இந்த மசோதா சட்டமாக மாறும். இதன் மூலம் அரசியல் அமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கிய முதல் நாடாக பிரான்ஸ் மாறி உள்ளது.

Awards/விருதுகள்

Sangeet Natak Akademi awards to 8 artistes from Tamil Nadu

 • A total of 94 awards will be presented by the President for the years 2022 and 2023.
 • Maharajapuram Ramachandran (Carnatic vocalist) from Tamil Nadu; Jayanthi Kumaresh (Veena) will receive the Academy Awards for 2022.
 • Pramila Gurumurthy and K. Viswanatha Pulavar (Puppetry) – Award for the year 2022 for their overall contribution to cultural programmes.

தமிழகத்தின் 8 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்படவுள்ளது

 • கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்குச் சேர்த்து மொத்தம் 94 விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.
 • இதில் தமிழகத்தைச் சேர்ந்த மகாராஜபுரம் ராமச்சந்திரன் (கர்நாடக வாய்ப்பாட்டு); ஜெயந்தி குமரேஷ் (வீணை) ஆகியோர் 2022-ஆம் ஆண்டிற்கான அகாதெமி விருதுகளைப் பெறுகின்றனர்.
 • கலை நிகழ்ச்சிகளில் ஒட்டு மொத்த பங்களிப்புக்காக பிரமிளா குருமூர்த்தி, க.விசுவநாதப் புலவர் – (பொம்மலாட்டம்) 2022-ஆம் ஆண்டிற்கான விருதை பெறுகின்றனர்.

Important Days/முக்கியமான நாட்கள்

March 5 – The historical Gandhi Irwin Pact was signed on this Day on 1931.

 • The Gandhi Irwin Pact was an agreement signed between Mahatma Gandhi and Lord Irwin in 1931.
 • This pact aimed to resolve the civil disobedience movement and ease political tensions in India.
 • By this Pact, the Indian National Congress agreed to suspend the civil disobedience movement.
 • It also allowed Indians to take part in the Round Table Conferences. The Gandhi Irwin Pact played a big role in India’s fight for freedom.

மார்ச் 5 - வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி இர்வின் ஒப்பந்தம் இதே நாளில் கையெழுத்திடப்பட்டது.

 • காந்தி இர்வின் ஒப்பந்தம் என்பது 1931 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி மற்றும் இர்வின் பிரபு இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.
 • இந்த ஒப்பந்தம் ஒத்துழையாமை இயக்கத்தைத் தீர்ப்பதையும், இந்தியாவில் அரசியல் பதட்டங்களைத் தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
 • இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டது.
 • வட்டமேசை மாநாடுகளில் இந்தியர்கள் பங்கேற்கவும் அனுமதித்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காந்தி இர்வின் ஒப்பந்தம் பெரும் பங்காற்றியது.

Daily Current Affairs/தினசரி நடப்பு நிகழ்வுகள் - March 06, 2024 - Consolidated

 • ‘Neengal Naalama’ scheme launched in Chennai by Chief Minister of Tamilnadu
 • ‘நீங்கள் நலமா’ திட்டம் தமிழக முதல்வரால் சென்னையில் தொடங்கப்பட்டது
 • Pudhumai Penn Scheme has increased number of girl students in higher education by 34%, says CM
 • புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரிப்பு என முதலமைச்சர் தகவல்
 • India’s first underwater metro rail to be launched in Kolkata
 • இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் கொல்கத்தாவில் தொடங்கப்படவுள்ளது
 • India reopens export of onion, rice
 • வெங்காயம், அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு மீண்டும் அனுமதி
 • PM lays foundation stone and dedicates to nation multiple development projects worth over Rs 19,600 crores in Chandikhole, Odisha
 • ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19, 600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
 • France has successfully passed a bill to allow women to abort their abortion.
 • பிரான்ஸ் நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
 • Sangeet Natak Akademi awards to 8 artistes from Tamil Nadu
 • தமிழகத்தின் 8 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்படவுள்ளது
 • March 5 – The historical Gandhi Irwin Pact was signed on this Day on 1931.
 • மார்ச் 5 – வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி இர்வின் ஒப்பந்தம் இதே நாளில் கையெழுத்திடப்பட்டது.

Do you wish to crack TNPSC Exams in 2024? - Register Now

How would you like to rate this content?

Was the content helpful?

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.