நீங்க TNPSC CCSE 4 தேர்வு எழுத போறீங்களா இத படிங்க முதல்ல

நீங்க TNPSC CCSE 4 தேர்வு எழுத போறீங்களா இத படிங்க முதல்ல..! (2)-min
IBPS Clerk Recruitment Notification 2019 (CRP IX 2019) – 12072 Vacancies

12000+ Bank Clerk Vacancies in 17 PSU Banks

Join Bank  Coaching in RACE Institute Today.

Excellent Coaching @ Lowest Fee

TNPSC GROUP 4 தேர்வு எழுதும்‌ தோழர்களுக்கு…

போட்டித்தேர்வின்‌ மூலம்‌ ஒருவர்‌ தன்‌ வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும்‌ என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம்‌ அதை ஒருவித பதற்றத்துடன்‌ அணுகாமல்‌ உழைப்பின்‌ அறுவடை நாள்‌ போன்ற மனநிலையில்‌ கையாள வேண்டும்‌ என்பது தான்‌ மிக முக்‌கியமானது.

பொதுவாக போட்டித்‌ தேர்வுத்தாள்கள்‌ ஒவ்வொரு தேர்வின்‌ போதும்‌ மாறுபடும்‌. எனவே நாம்‌ தேர்வுக்கு மிக நன்றாக உழைத்திருந்தும்‌ அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்து கொள்ளாமல்‌ அவசியமான நேர்மறை எதிர்பார்ப்புகளை மட்டுமே உருவாக்கி கொள்ள வேண்டும்‌. காரணம்‌ தேர்வுத்தாளின்‌ ஒரு சில பகுதிகள்‌ கடுமையாகவும்‌ இருக்கலாம்‌ அல்லது அனைத்தும்‌ மிதமாகவும்‌ இருக்கலாம்‌.

பத்தாம்‌ வகுப்பு தகுதியில்‌ இந்த தேர்வு எழுதப்படுகிறது. ஆனால்‌ இதற்கு விண்ணப்பித்தவர்களில்‌ பட்டதாரிகள்‌, பொறியியல்‌ பட்டம்‌ பெற்றவர்களும்‌ என லட்சக்கணக்கில்‌ உள்ளனர்‌.

ஏன்‌ அவர்களால்‌ TNPSC தேர்வில் வெற்றி பெற முழுயவில்லை.?

காரணம்‌ திட்டமிட்டு படிக்காதது. தேர்வு குறித்தும்‌ அதன்‌ பாடத்திட்டம்‌ குறித்தும்‌. தகுந்த வழிகாட்டுதல்‌ உடன்‌ திட்டமிட்டுப்படித்தால்‌ வெற்றி நிச்சயம்‌. 12 மணி நேரம்‌ தொடர்ந்து படிப்பது முக்கியம்‌ கிடையாது.

எந்த பாடத்தை எப்படி படிப்பது என்பது தான்‌ பத்திசாலிதனம்‌.

RACE பயிற்சி மையத்தில் பல்வேறு பயிற்சி முறைகளில் பயின்றவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

முதலில்‌ பயம்‌, பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள்‌. வெற்றிக்கான முதல்‌ தடை அவைதான்‌. ரிலாக்ஸாக மனக்குழப்பம்‌ இல்லாமல்‌ தேர்வுக்குத்‌ தயாராகுங்கள்‌. தேர்ச்சி மட்டும்தான்‌ உங்கள்‌ இலக்கு. ‘நம்மால்‌ முடியுமா, இவ்வளவு லட்சம்‌ பேரில்‌ நாம்‌ தேர்ச்சி அடைவோமா?’ என்பது போன்ற நெகட்டிவான கேள்விகளைத்‌ தள்ளி வைத்துவிடுங்கள்‌.

ஒரு உளவியலைப்‌ பரிந்துகொள்ளுங்கள்‌.

இத்தேர்வை எழுதப்போவது 17 லட்சத்து சொச்சம்‌ பேர்‌ என்றாலும்‌ இதில்‌ சில லட்சம் பேர்‌ மட்டுமே சிரத்தையான தயாரித்தல்களோடு தேர்வுக்கு வருவார்கள்‌. அதாவது, ஒரு பதவிக்கு பத்து பேர்‌.

அவர்களோடுதான்‌ நீங்கள்‌ போட்டியிடப்‌போகிறீர்கள்‌. எனவே 10-ல்‌ ஒருவராக வந்திருக்கிற உங்களால்‌ பத்தில்‌ முதல்வராகவும்‌ வர முடியும்‌. இதுவரை எப்படி படித்திருக்கிறீர்கள்‌ என்பது முக்கியமல்ல. இருக்கிற அவகாசத்தில்‌ கவனச்சிதறல்‌ இல்லாமல்‌ ரிவிஷன்‌ செய்தால்‌ கூட ஜெயித்துவிடலாம்‌.

RACE Institute -ல் பயிற்சி வகுப்புக்குச்‌ சென்றிருந்தால்‌, அவர்கள் கொடுத்த  வகுப்பு நோட்டுக்கள், கடந்த நாட்களில்‌ நீங்கள் படித்த எழுதிவைத்த குறிப்புகள்‌ போன்றவற்றை முழுவதுமாக இரண்டு முறை படித்து றினைவுக்குக்‌ கொண்டுவர வேண்டியது அவசியம்‌.

பின்குறிப்பு: படிக்கும்‌ ஆர்வத்தில்‌ சரியான உணவு. போதிய தாக்கம்‌ ஆகியவற்றில்‌ அசட்டையாக இருக்க வேண்டாம்‌.

Join RACE Institute Today. ADMISSIONS Going On. Limited seats are left. Block your Seat now ..!

DATECOURSEBRANCHINQUIRE
25/11/2019BANKCHENNAI Enquire Now
25/11/2019BANKCHENNAI Enquire Now
25/11/2019BANKCHENNAI Enquire Now
25/11/2019BANKCHENNAI Enquire Now
27/11/2019TNPSCCHENNAI Enquire Now
30/11/2019BANKCHENNAI Enquire Now
01/12/2019BANKCHENNAI Enquire Now
25/11/2019PSCCOCHIN Enquire Now
25/11/2019BANKPUDUCHERRY Enquire Now
25/11/2019BANKPUDUCHERRY Enquire Now
22/11/2019BANKTIRUVANNAMALAI Enquire Now
22/11/2019TNPSCTIRUVANNAMALAI Enquire Now
25/11/2019BANKVELLORE Enquire Now
25/11/2019TNPSCVELLORE Enquire Now
30/11/2019BANK + SSCVELLORE Call & Inquire

தேர்வுக்கு முதல்நாள் நீங்கள்‌ கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்க‌ள்:

தேர்வுக்கு முதல்நாள்‌, படித்ததை மட்டும்‌ நினைவுபடுத்திப்‌ பாருங்கள்‌. புதிதாக படிக்க வேண்டாம்‌. காலையில்‌ புள்ளிவிவரங்களை மட்டும்‌ அரை மணி நேரம்‌ திருப்பிப்‌ பார்த்துவிட்டு கிளம்பிவிடுங்கள்‌.

இரவு 10.00 மணிக்குள்‌ உறங்கச்‌ சென்றுவிடுங்கள்‌. முன்தினம்‌ இரவில்‌ சரியாக தூங்காவிட்டால்‌ தேர்வறையில்‌ சோர்வு வந்துவிடும்‌. கவனம்‌.

தேர்வறையில்‌ நீங்கள்‌ சில விஷயங்களைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌.

குறித்த நேரத்திற்கு முன்னரே மையத்திற்கு சென்று விடுங்கள்‌. முன்பே தேர்வு நடக்கும்‌ அறையைத்‌ தெரிந்து வைத்துக்கொள்வது கடைநேர படபடப்பைக்‌ குறைக்கும்‌. மறக்காமல்‌, தேர்வுக்கூட நுழைவுச்‌ ஈட்டு (Exam Call Letter), இரண்டு / மூன்று பந்துமுனை பேனா (BallPoint Pen) முதலியன எடுத்துவிட்டீர்களா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்‌.

தவறாக எழுதிய விடையை அழிக்க முயற்சிக்க வேண்டாம்‌. பிளேடு, ஓயிட்னர்‌ பயன்படுத்த கூடாது. விடைத்தாள்‌ செல்லாமல்‌ போகலாம்‌. முதலிலேயே சரியாக விடையளித்து விட வேண்டும்‌.

முக்கியமாக வீண்‌ பதட்டம்‌ வேண்டாம்‌.

வினாத்தாளில்‌ 200 கேள்விகள்‌ கேட்கப்படும்‌. சுமார்‌ 40 முதல்‌ 50 பக்கம்‌ வரை இருக்கும்‌. எனவே கேள்விகளைத்‌ தெளிவாகப்‌ பரிந்து கொண்டு சந்தேகமற்றுக்‌ தெரியும்‌ பதில்களை முதலில்‌ டிக்‌ செய்ய வேண்டும்‌. பல கேள்விகள்‌ எதிர்மறைக்‌ கேள்விகளாகவே அமையும்‌.

உதாரணத்துக்கு. சரியல்லாத தொடர்‌ எது? தவறல்லாதது எது? பண்பத்தொகையற்ற தொடர்‌ எது? என்று கேள்விகள்‌ அமையக்கூடும்‌.

பொது அறிவிலும்‌ கூட எதிர்மறை கேள்விகள்‌ இடம்பெறும்‌.

உதாரணத்துக்கு. ‘கீழ்க்கண்டவற்றுள்‌ நெய்வேலியில்‌ கிடைக்காதது எது?’ என்று கேள்வி கேட்கப்படும்‌. விடைகளில்‌ முதல்‌ ஆப்ஷனாக ‘நிலக்கரி’ என்ற பெயர்‌ இருக்கும்‌. பலர்‌ கேள்வியைச்‌ சரியாக வாசிக்காமல்‌, அவசரத்தில்‌ நிலக்கரி-யைத்‌ தேர்வு செய்துவிடுவார்கள்‌. நன்கு தெரிந்தும்‌ மதிப்பெண்ணை இழக்க வேண்டிவரும்‌. அதனால்‌ கவனம்‌ தேவை.

ஒரு கிரிக்கெட்வீரர்‌ எப்படி பிட்ச்‌ தன்மையையும்‌, பெளலரின்‌ திறனையும்‌ கணிக்க முடியாததோ அதே போன்று தான்‌ இது. எனவே 3 மணி நேரத்தில்‌ தேர்வுத்தாளுக்கு ஏற்ற மாதிரி நாம்‌ செயலாற்ற வேண்டியது மிக அவசியம்‌. ஒருவேளை மிதமாக இருக்கும்பட்சத்தில்‌ அவரசப்படாமல்‌ நிதானத்துடன்‌ செயலாற்ற வேண்டியது மிக முக்கியம்‌. எதுவாயினும், விடைகளை ஒரு முறை கேள்வியுடன்‌ ஓப்பிட்டு பார்த்து விடையளிக்க வேண்டும்‌. இதன்‌ மூலம்‌ சில தவறுகளை தவிர்க்க முடியும்‌.

TNPSC GROUP 4 தேர்வுக்கு எப்படி படிப்பது?

சற்று கால தாமதம் ஆனாலும், இங்கே கொடுக்கப்பட்டவாறு நீங்கள் பயிற்சி எடுத்துள்ளீரா என்று சரி பார்த்துக்கொள்ள இந்த பத்தி உங்களுக்கு உதவும்.

நாள்தோறும்‌ படிப்பை துவங்குவதற்கு முன்னதாக படித்ததை நினைவுபடுத்தி படித்த பின்பு தான்‌, புதிய பாடத்தை படிக்க துவங்க வேண்டும்‌. பாடதிட்டத்தை தேர்வு செய்து. தன்னம்பிக்கையுடன்‌. திட்டமிட்டு பாட புத்தகத்தை தெளிவாக படித்தால்‌ அரசு வேலை உறுது.

ஆறு முதல்‌ பத்தாம்‌ வகுப்பு வரை உள்ள சமச்சீர்‌ பாட பத்தகங்கள்‌ கண்டிப்பாக உங்களிடம்‌ இருக்க வேண்டும்‌. இதில்‌ இருந்து தான்‌ வினாக்கள்‌ வரும்‌.


Language & General Knowledge

பொது அறிவு பிரிவில்‌ 100 வினாக்களும்‌, பொது தமிழில்‌ 100 கேள்விகளும்‌ இருக்கும்‌. முதல்‌ பிரிவில்‌ பொது அறிவில்‌ 75 வினாக்களும்‌. திறனறிவு தேர்வில்‌ 25 வினாக்களும்‌ இருக்கும்‌.

மொழிப்பாடங்களே அதிக மதுப்பெண்களைப்‌ பெற்றுத்‌ தரும்‌. இருக்கும்‌ அவகாசத்தில்‌ அனைத்து தலைப்புகளையும்‌ முழுவதுமாக மீண்டும்‌ ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்‌.

பொது அறிவு அனைவரும்‌ படிப்பர். எனவே “கட்‌ ஆப்‌’ மார்க்கில்‌ உயர்ந்த இடத்தை பிடிக்க, திறனறி தேர்வு, நடப்பு கால றிகழ்ச்சி. பொதுத்தமிழ்‌ இவைகளில்‌ கவனம்‌ செலுத்தி படித்து அதிகபட்ச மதிப்பெண்‌ பெற்றால்‌ அரசு வேலை உறுதி.

பொருத்துக. இணை தேர்வு. பொருந்தாது என சிக்கலான வினாக்கள்‌ இருக்கும்‌. எனவே இவற்றை கவனமுடன்‌ பழுத்து. சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்‌.


History & Current Affairs

வரலாறு. விடுதலைப்‌ போராட்டம்‌. சமீப நிகழ்வுகள்‌ இந்திய பொருளாதாரம்‌, பொது அறிவு என எல்லாப்‌ பாடங்களிலும்‌ எடுத்து வைத்திருக்கும்‌ குறிப்புகளை ஒருமுறை திருப்பிப்பாருங்கள்‌.

History

வரலாற்று பாடத்தில்‌ காலச்சுவடு அமைத்து படிக்கவேண்டும்‌. கற்காலம்‌ முதல்‌ சுதந்திரம்‌ பெற்றது வரை முக்கிய ஆண்டுகளை வரிசை படுத்தி அந்த சம்பவங்களை குறித்து வைத்து படிக்க வேண்டும்‌. போர்கள்‌ நடந்த ஆண்டு, யாருக்கு வெற்றி, அதில்‌ ஏற்பட்ட ஒப்பந்தம்‌ என வரிசைப்படுத்தி படிக்கவேண்டும்‌.

Current Affairs

பொது அறிவுப்‌ பகுதியில்‌ அறிவுத்திறன்‌ மற்றும்‌ அறிவுக்கூர்மை பகுதிகளில்‌ 25 கேள்விகள்‌ கேட்கப்படுகின்றன. இவற்றை எளிமையாகப்‌ புரிந்து கொள்ளலாம்‌. சூத்திரங்களை மனதில்‌ பதித்து வைத்துக்கொள்ளுங்கள்‌.

நாளிதமழ்‌: புத்தகத்தில்‌ இல்லாத கேள்விகள்‌ நடப்பு காலநிகழ்வாக 15 வினாக்கள்‌ கேட்கப்படும்‌. இதற்கு நாளிதழ்‌ படிப்பது அவசியம்‌. மத்திய அமைச்சர்கள்‌. உலக நிகழ்வுகள்‌. மக்கள்‌ தொகை புள்ளிவிவரங்கள்‌. பட்ஜெட்‌. அரசு நலத்திட்ட்ங்கள்‌. அரசு விருதுகள்‌. பரிசுகள்‌ உள்ளிடட நடப்பு விவரங்களில்‌ எப்போதும்‌ தெளிவாக இருங்கள்‌.

விருதுகள்‌. கண்டுபிடுப்புகள்‌. விளையாட்டில்‌ சாதனையாளர்கள்‌, நடந்த இடம்‌, நடைபெற உள்ள இடம்‌. உலக தலைவர்களின்‌ பெயர்கள்‌. அவர்கள்‌ வகிக்கும்‌ பதவிகள்‌ என அனைத்தையும்‌ குறித்து வைத்து படிக்கவேண்டும்‌. கடந்த ஒரு ஆண்டு நடந்த நிகழ்வுகளை குறித்து வைத்து ஞாபகப்படுத்துவது நல்லது.


Science

அறிவியல்‌ பாடம்‌: 20 முதல்‌ 25 வினாக்கள்‌ கேட்கப்படுகிறது. இயற்பியல்‌ பாடம்‌ படிக்கும்‌ போது 6-ம்‌ வகுப்பில்‌ காந்தவியல்‌ பகுதி படித்தால்‌. தொடர்ந்து ஏழாம்‌ வகுப்பிலும்‌ எட்டாம்‌ வகுப்பு என பத்தாம்‌ வகுப்பு வரை உள்ள காந்தவியலை படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்‌. இது போல்‌ ஒவ்வொரு பாடத்தையும்‌ ஒரு வகையில்‌ படிக்க வேண்டும்‌.

உயிரியல்‌ பாடத்தில்‌ மனிதனுக்கு ஏற்படும்‌ நோய்கள்‌. விட்டமின்கள்‌ போன்றவற்றை கண்டிப்பாக படித்து குறிப்பெடுக்க வேண்டும்‌. உயிரியல்‌ பாடத்தில்‌ 6 முதல்‌ 8 கேள்விகளும்‌, இயற்பியல்‌, வேதியியலில்‌ 6 முதல்‌ 8 கேள்விகளும்‌ கேட்கப்படும்‌.

Time Management Tips to Crack TNPSC GROUP 4 Exam 2019

நேர மேலாண்மை மிக முக்கியம்‌. ஏனெனில்‌ தெரியாத ஒரு கணக்கிற்காக மெனெக்கெட்டு பின்னர்‌ நேரமின்மையால்‌ பல வினாக்களை பதிலளிக்க முடியாமல்‌ வர நேரிடலாம்‌.

எனவே முதலில்‌ தெரிந்த வினாக்களுக்கு விரைவாக பதிலளிக்கவும்‌. பின்னர்‌ இதுவா / அதுவா எனைத்தோன்றும்‌ வினாக்களுக்கு சந்தித்து பதிலளிக்கவும்‌.

நெகட்டிவ்‌ மதிப்பெண்‌ இல்லை என்ற காரணத்தால் கடைசியாக தெரியாத வினாக்களுக்கு ஏதாவது ஒரு விடையை இட்டு விடைத்தாளை ஒப்படைக்கலாம்‌. இப்படி செய்தால்‌ தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்கவில்லையே என வருத்தம்‌ இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களால் இந்த TNPSC GROUP 4 தேர்வில் வெற்றி பெற முடியும்

இந்த நேரத்தில்‌ உங்கள்‌ வாழ்வின்‌ சிறு சிறு வெற்றிகளையும் நிகழ்வுகளையும்‌ உங்கள்‌ மனத்திரையில்‌ காட்சிப்படுத்துங்கள்‌. அது உங்களை உற்சாகத்துடனும்‌. மகிழ்வுடனும்‌ தேர்வை அணுகவைக்கும்‌. உங்கள்‌ அறுவடையை பன்மடங்கு பெருக்கும்‌.

பலராலும்‌ சாதிக்க முழந்தது உங்களாலும்‌ முடியும்‌. உங்களின்‌ இலட்சியம்‌ நிறைவேற கனவுகள்‌ நனவாக்க வாழ்த்துக்கள்‌…!

கண்டிப்பாக இந்த முறை வேலை வாங்கியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி செய்யும் அனைவருக்கும் தேர்விலும் வாழ்க்கையிலும் வெற்றி உறுதி.

விடாமுயற்சி ஒருநாளும்‌ தோல்வி அடைவதில்லை.

இக்தேர்வில்‌ கவனத்தோடும்‌. கருத்தோடும்‌ எதிர்‌ கொண்டு வெற்றிபெறவிருக்கும் அனைவருக்கும்‌ என்‌ வாழ்த்துக்கள்‌.

ஜெயித்துக்‌ கொண்டே இருப்போம்‌…!

வாழ்த்துக்கள்.

We are on Social Media Now. Follow us in any of the Social Media mentioned below. Download our RACE APP & get frequent updates on latest exam notifications etc.

Want to get a Job in Bank or Govt Organization?

Join Chennai RACE Institute Today

Select Course

Select Branch

Find #1 Trending Videos on RACE YouTube ChannelNearing 3 Lakh Subscriptions ...

Continue reading

Join RACE & Become a Bank / Govt Officer in 2019