குறித்த நேரத்திற்கு முன்னரே மையத்திற்கு சென்று விடுங்கள். முன்பே தேர்வு நடக்கும் அறையைத் தெரிந்து வைத்துக்கொள்வது கடைநேர படபடப்பைக் குறைக்கும். மறக்காமல், தேர்வுக்கூட நுழைவுச் ஈட்டு (Exam Call Letter), இரண்டு / மூன்று பந்துமுனை பேனா (BallPoint Pen) முதலியன எடுத்துவிட்டீர்களா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
தவறாக எழுதிய விடையை அழிக்க முயற்சிக்க வேண்டாம். பிளேடு, ஓயிட்னர் பயன்படுத்த கூடாது. விடைத்தாள் செல்லாமல் போகலாம். முதலிலேயே சரியாக விடையளித்து விட வேண்டும்.
முக்கியமாக வீண் பதட்டம் வேண்டாம்.
வினாத்தாளில் 200 கேள்விகள் கேட்கப்படும். சுமார் 40 முதல் 50 பக்கம் வரை இருக்கும். எனவே கேள்விகளைத் தெளிவாகப் பரிந்து கொண்டு சந்தேகமற்றுக் தெரியும் பதில்களை முதலில் டிக் செய்ய வேண்டும். பல கேள்விகள் எதிர்மறைக் கேள்விகளாகவே அமையும்.
உதாரணத்துக்கு. சரியல்லாத தொடர் எது? தவறல்லாதது எது? பண்பத்தொகையற்ற தொடர் எது? என்று கேள்விகள் அமையக்கூடும்.
பொது அறிவிலும் கூட எதிர்மறை கேள்விகள் இடம்பெறும்.
உதாரணத்துக்கு. ‘கீழ்க்கண்டவற்றுள் நெய்வேலியில் கிடைக்காதது எது?’ என்று கேள்வி கேட்கப்படும். விடைகளில் முதல் ஆப்ஷனாக ‘நிலக்கரி’ என்ற பெயர் இருக்கும். பலர் கேள்வியைச் சரியாக வாசிக்காமல், அவசரத்தில் நிலக்கரி-யைத் தேர்வு செய்துவிடுவார்கள். நன்கு தெரிந்தும் மதிப்பெண்ணை இழக்க வேண்டிவரும். அதனால் கவனம் தேவை.
ஒரு கிரிக்கெட்வீரர் எப்படி பிட்ச் தன்மையையும், பெளலரின் திறனையும் கணிக்க முடியாததோ அதே போன்று தான் இது. எனவே 3 மணி நேரத்தில் தேர்வுத்தாளுக்கு ஏற்ற மாதிரி நாம் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். ஒருவேளை மிதமாக இருக்கும்பட்சத்தில் அவரசப்படாமல் நிதானத்துடன் செயலாற்ற வேண்டியது மிக முக்கியம். எதுவாயினும், விடைகளை ஒரு முறை கேள்வியுடன் ஓப்பிட்டு பார்த்து விடையளிக்க வேண்டும். இதன் மூலம் சில தவறுகளை தவிர்க்க முடியும்.