Thiruvannamalai Dist. Co-operative Bank » raceinstitute.in

Thiruvannamalai Dist. Co-operative Bank Clerk Recruitment 2019 – 109 Vacancies

Thiruvannamalai Dist. Co-operative Bank Clerk
Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

Thiruvannamalai Dist. Co-operative Bank Clerk Recruitment – 109 Vacancies

திருவண்ணாமலை மாவட்ட, கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ கீழ்க்காணும்‌ கூட் டுறவு நிறுவனங்களில்‌ காலியாக உள்ள உதவியாளர்‌ பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக இந்தியக்‌ குடியுரிமையுடைய கீழ்க்காணும்‌ தகுதிபெற்ற ஆண்‌/பெண்‌ விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையஇணையதள முகவரியில்‌ மட்டுமே (Online) வரவேற்கப்படுகின்றன.

Interested candidates are advised to read the notifications carefully and apply on or before the last date that is provided below.

Important Dates – Thiruvannamalai DCB Assistant Recruitment

Last Date to apply Online: 27 September (till 5.45 PM)

Exam Date: 23 November & 24 November (10 AM to 1 PM)

Post & Vacancy Details – Thiruvannamalai DCB Assistant Recruitment

Name of the Post: Bank Assistant

Total No of Vacancies: 109

Age Limit – Thiruvannamalai DCB Assistant Recruitment

விண்ணப்பதாரர்‌ 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்‌ (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்‌).

விண்ணப்பதாரர்கள்‌ 01.01.2019 அன்று கீழ்க்கண்ட வயதினைப்‌ பூர்த்தி செய்தவராக இருக்கக்‌கூடாது.

Upper Age Limit:

வயது வரம்பு இல்லை (NO UPPER AGE LIMIT for) ஆதிதிராவிடர்‌, அருந்ததியர்‌, பழங்குடியினர்‌,மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌/ சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (முஸ்லிம்‌) மற்றும்‌ இவ்வகுப்புகளைச்‌ சார்ந்த முன்னாள்‌ இராணுவத்தினர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌.

பிற வகுப்பினர்‌ (OC): 30 வயதுக்கு மிகாமல்‌.

All Category Widow candidates: வயது வரம்பு இல்லை

பிற வகுப்பினர்‌ (OC) Ex-Servicemen: 48 வயதுக்கு மிகாமல்‌.

பிற வகுப்பினர்‌ (OC) PwD Candidates: 40 வயதுக்கு மிகாமல்‌.

கல்வித்‌ தகுதி – Thiruvannamalai DCB Assistant Recruitment

ஏதேனும்‌ ஒரு பட்டப்படிப்பு (Any Degree in 10+2+3 Pattern) மற்றும்‌ கூட்டுறவுப்‌ பட்டைய பயிற்சியை நேரடியாகவோ தொலைதூரக் கல்வியாகவோ படித்திருக்க வேண்டும்

கூட்டுறவை ஒரு பாடமாக கொண்ட படிப்பு

கூட்டுறவு பயிற்சி அல்லது 2019-2020-ஆம் ஆண்டின் கூட்டுறவு படிப்பினை

Knowledge in Computer Application. A Course completion certificate from Govt approved Institutions required.

பல்கலைக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்பிற்குப்‌ பதிலாக, பதினைந்து ஆண்டுகள்‌ இராணுவத்தில்‌ பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால்‌ வழங்கப்படும்‌ பட்டப்‌ படிப்புச்‌ சான்றிதழ்‌ பெற்றுள்ள முன்னாள்‌ இராணுத்தினர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌. ஆனால்‌ அவர்கள்‌ பள்ளி இறுதித்‌ தேர்விலும்‌ (SSLC) மேல்‌ நிலைக்‌ கல்வியிலும்‌ (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

கூட்டுறவுப்‌ பயிற்சி பெற்றவர்கள்‌ மட்டுமே மேற்படி உதவியாளர்‌ நியமனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்‌. கூட்டுறவுப்‌ பயிற்சி குறித்த விரிவான விவரங்கள்‌ அடங்கிய பதிவாளர்‌ அவர்களின்‌ சுற்றறிக்கை எண்‌ 29/2013, நாள்‌ 18.07.2013 மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள்‌ பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப்‌ படிப்பு அல்லது பட்டப்‌படிப்பின்‌ போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்துத்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

கணினி பயன்பாட்டில்‌ அடிப்படை அறிவு பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்பக்‌ கட்டணம்‌ – Thiruvannamalai DCB Assistant Recruitment

NO FEE for ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌, அனைத்துப்‌ பிரிவையும்‌ சார்ந்த மாற்றுத்‌ திறனாளிகள்‌, அனைத்துப்‌ பிரிவையும்‌ சார்ந்த ஆதரவற்ற விதவைகள்‌ ஆகியோருக்கு இக்கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

(விண்ணப்பக்‌ கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்‌ திறனாளிகள்‌ மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலரிடமிருந்து சான்றிதழும்‌ மருத்துவச்‌ சான்றிதழும்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

ஆதரவற்ற விதவைகள்‌ வருவாய்‌ கோட்ட அலுவலர்‌ அல்லது உதவி ஆட்சியர்‌ அல்லது சார்‌ ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்‌.)

For Others: Rs. 250/-

Selection Procedure – Thiruvannamalai DCB Assistant Recruitment

The Selection of the candidates will be made based on a Written Examination followed by Personal Interview.

எழுத்துத்‌ தேர்வு

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ளவர்கள்‌ மட்டுமே எழுத்துத்‌ தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்‌. எழுத்துத்‌தேர்வில்‌ கலந்துக்‌ கொள்ளத்‌ தகுதி பெற்ற நபர்களின்‌ பட்டியல்‌ அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.

எழுத்துத்‌ தேர்வு மாவட்டத்தின்‌, குறிப்பிட்ட இடங்களில்‌ நடைபெறும்‌. எழுத்துத்‌ தேர்வு எந்த இடத்தில்‌ நடைபெறும்‌ என்பது எழுத்துத்‌ தேர்வுக்கான நுழைவுச்‌ சீட்டில்‌ குறிப்பிடப்படும்‌. எழுத்துத்‌ தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள்‌ மின்னஞ்சல்‌ மூலம்‌ தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்‌. எழுத்துத்‌ தேர்வுக்கான நுழைவுச்‌ சீட்டினை அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

நுழைவுச்‌ சீட்டுடன்‌ வராத விண்ணப்பதாரர்கள்‌ எழுத்துத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்‌.

எழுத்துத்‌ தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும்‌, பொது அறிவு, அடிப்படைக்‌ கணக்கியல்‌, கூட்டுறவுச்‌ சட்டம்‌ மற்றும்‌ வங்கியியல்‌ போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும்‌ இருக்கும்‌.

எழுத்துத்‌ தேர்வு கொள்குறி வகையில்‌ (Objective Type) 200 வினாக்களுடன்‌, 170 மதிப்பெண்களுக்கானதாகவும்‌ தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள்‌ கொண்டதாகவும்‌ இருக்கும்‌.

வினாத்தாள்‌ ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழில்‌ அச்சடிக்கப்பட்டிருக்கும்‌.

How to apply? - விண்ணப்பிக்கும்‌ முறை

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப்‌ படிவம்‌ அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம்‌ மூலம்‌ மட்டுமே பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.

விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்யும்‌ முன்‌ கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்‌.

விண்ணப்பப்‌ படிவங்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ முழுமையாகப்‌ பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்‌.

விண்ணப்பப்‌ படிவங்களுடன்‌ கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளும்‌ அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்‌ ஸ்கேன்‌ செய்யப்பட்டு பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.

1) விண்ணப்பதாரரின்‌ புகைப்படம்‌ – 50 KB அளவுக்கு மிகாமல்‌

2) விண்ணப்பதாரரின்‌ கையெழுத்து – 50 KB அளவுக்கு மிகாமல்‌

3) விண்ணப்பதாரரின்‌ சாதிச்‌ சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌

4) மாற்றுத்‌ திறனாளி சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌

5) ஆதரவற்ற விதவை சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌

6) கூட்டுறவு பட்டயப்‌ பயிற்சி சான்றிதழ்‌ – 200 KB அளவுக்கு மிகாமல்‌

7) மத்திய கூட்டுறவு வங்கி மூலம்‌ செலுத்தப்பட்ட விண்ணப்பக்‌ கட்டண இரசீது (Candidate’s Copy of the pay-in-slip) – 100 KB அளவுக்கு மிகாமல்‌.

மேற்குறிப்பிட்ட ஸ்கேன்‌ செய்யப்பட்ட ஆவணங்கள்‌ பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.

விண்ணப்பத்தைப்‌ பூர்த்தி செய்யும்‌ போது, விண்ணப்பதாரர்‌ தவறான தகவல்களை அளித்தால்‌ அவ்விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.

Direct Links – Thiruvannamalai DCB Assistant Recruitment

How would you like to rate this content?

Was the content helpful?

Daily Current Affairs – June 11, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – June 11, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one of the

Read More »

Daily Current Affairs – June 09 & 10, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – June 09 & 10, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one

Read More »

Want to crack Govt Exam this year?

JOIN BANK CourSe in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.