TNPSC Group 2 & 2A Merger: Official Notice » raceinstitute.in

TNPSC Group 2 & 2A Merger: Official Notice

TNPSC Merges Group 2 & 2A Exams into one Recruitment. The interview is conducted for Group 2 Category posts only. Exams are the same. Revised Syllabus
Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A பிரிவுகளுக்கு இனி ஒரே தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய 2 பிரிவு பணியிடங்களுக்கும் இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்த இரு பிரிவுகளுக்கும் முதனிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரயமும் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. எனவே இரண்டுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம்- தமிழுக்கும் தமிழகத்திற்கும் முக்கியத்துவம்

இதுநாள் வரை குரூப் 2  மற்றும்  குரூப் 2ஏ முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தெரிவாக முடியும்.

அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது. அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Mains) சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மை (Mains) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

முதனிலைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள் சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு 19 -ஆம் நூற்றாண்டு முதல் 20 -ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறளுக்கு முக்கியத்துவம்:

மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சமூக நீதி சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள் சமூக நல்லிணக்கம் தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

முதன்மை  எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை: விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும் தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுவதால்  முதன்மைத் (Prelims) தேர்வில் தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் – தமிழ்  மொழிபெயர்ப்பு; சுருக்கி வரைதல்; கட்டுரை எழுதுதல்; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றி கட்டுரை அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்துவம்

முதன்மை எழுத்துத் தேர்விலும் தமிழுக்கும் தமிழகத்தின் வரலாறு பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரீகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி சங்க கால இலக்கியம் தமிழகத்தின் இசைப் பாரம்பரியம் நாடகக் கலை  பகுத்தறிவு இயக்கம் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

How would you like to rate this content?

Was the content helpful?

It is easy to crack TNPSC Group 2 Exam this year.

JOIN TNPSC CourSe in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.