All about TNPSC Exams » raceinstitute.in

All about TNPSC Exams

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

before we start to prepare for the TNPSC Examinations, we should know some of the basic details of the TNPSC Tamil Nadu Public Service Commission which are very Important. TNPSC is the state-owned Recruitment Portal to fill vacancies in TamilNadu State Govt Organizations. 

Candidates who wish to get placed in TamilNadu State Govt, should undergo the Selection Procedure as directed in the Official Notification.

So, History of TNPSC, Recruitments conducted by TNPSC, Job Role, Selection Procedure, TNPSC Exam Syllabus, Interview & Final Selection, Free TNPSC Study Materials, TNPSC Model Examinations & Latest TNPSC Recruitment Notification details are the major points we here to discuss about.

All about TNPSC

1929-ம் ஆண்டு மெட்ராஸ் மாகணச் சட்டத்தின்படி “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்” (Madras Service Commission) தொடங்கபட்டது.

இந்தியாவில் தொடங்கபட்ட முதல் பணியாளர் தேர்வாணையம் என்ற சிறப்பை உடையது” தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்”.

மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் முதன்முதலில் தலைவர் உட்பட மூன்று பேர் கொண்ட அமைப்பாக இருந்தது. 1957 ம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைத்த பின்பு பல மாநிலங்கள் தங்களுக்கு என பணியாளர் தேர்வாணையத்தை தொடங்கினர்.

அப்பொழுது “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்“ “மெட்ராஸ் பொது பணியாளர் தேர்வாணையம்” என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பின்பு மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த பின்பு “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்” என்ற பெயரை பெற்றது.

இது இந்திய அரசியலமைப்பின்படி செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும்.

Join TNPSC Lifetime Validity Coaching @ Lowest Fee

One Course for all TNPSC Group I, II & Group 4 Exams

TNPSC யின் நோக்கம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதற்கு இணங்க, சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம். 

TNPSC தேர்வாணைய குறிக்கோள்கள்

மேலும் தேர்வாணையம் கீழ்க்காணும் குறிக்கோள்களைத் தன்னகத்தே கொண்டு பயணித்து வருகிறது.

1. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு, மாநில குடிமைப் பணிகளுக்கான தெரிவு முறை சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

2. காலத்திற்கேற்ப தெரிவு முறைகளை மேம்படுத்துதல்.

3. அரசுப் பணியாளர்களின் பணி நிலைகள் குறித்து அவ்வப்போது அரசுக்கு தக்க ஆலோசனை வழங்குதல்.

4. அரசுப் பணியாளர்களின் நலன்களையும், நேர்மைத் திறனையும் தொடர்ந்து பாதுகாத்தல்.

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.