தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு

TN TRB SGT Notification 2024

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு - 1768 காலிப்பணியிடங்கள்; மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on telegram
Share on linkedin
Share on email

TN TRB SGT Notification 2024

TN TR SGT Recruitment Exam 2024: தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teachers (SGT) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 9 பிப்ரவரி 2024 அன்று அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடக்கவிருக்கும் இந்த இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு 23 ஜூன் 2024 தேதி அன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TNTET போன்ற தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியராக வேலை வேண்டும் என்று கனவுடன் இருப்பவர்களுக்கும் இந்த TN TRB SGT Recruitment போட்டி தேர்வு அறிவிப்பு ஒரு அருமையான வாய்ப்பு.

இந்த TN TRB SGT Recruitment 2024 போட்டி தேர்வு குறித்து இந்த Veranda RACE பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த TN TRB SGT Recruitment 2024 தேர்விற்கு நேரடியாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இங்க க்ளிக் செய்யவும்:

TN TRB SGT Recruitment 2024: பணியிடங்கள் விவரம்

TN TRB SGT Recruitment 2024 – பணியிடங்கள் விவரம்

பணியின் பெயர்

மொத்த காலிப்பணியிடங்கள்

இடைநிலை ஆசிரியர்கள் (SGT)

1768

TN TRB SGT Recruitment 2024: முக்கியமான நாட்கள் & நேரம்

தகுதியுள்ள தேர்வர்கள் இந்த TN TRB SGT Recruitment 2024 தேர்விற்கு https://www.trb.tn.gov.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் 14 பிப்ரவரி 2024  அன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த TN TRB SGT Recruitment 2024 தேர்விற்கு 15 மார்ச் 2024 (மாலை 5.45 மணி வரை) வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 

அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியான நாள்

9 பிப்ரவரி 2024

இணையவழி மூலம் தேர்விற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தொடங்கும் நாள்

14 பிப்ரவரி 2024

இணையவழி மூலம் தேர்விற்கான விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கூறிய இறுதி நாள்

15 மார்ச் 2024 (மாலை 5.00 மணி வரை)

இணையவழி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி

12 மார்ச் 2024 (மாலை 5.00 மணி வரை)

TN TRB SGT (இடைநிலை ஆசிரியர் பணிக்கான) போட்டித் தேர்வு 2024

23 ஜூன் 2024

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க & நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ காலிப்பணியிடங்கள் இந்த TN TRB SGT போட்டி தேர்வு 2024-ன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

TN TRB SGT Recruitment 2024: தேர்வு முறை

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள இடைநிலை ஆசிரியர்‌ காலிப்பணியிடங்கள் மூன்று நிலைகளை கொண்டிருக்கும் என TN TRB SGT Recruitment 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த காலிப்பணியிடங்களுக்கான TN TRB SGT Recruitment 2024 தேர்வை நடத்தும் என்றும் இந்த அறிவிப்பாணையில் உள்ளது.

இந்த TN TRB SGT Recruitment 2024 தேர்வு மூன்று நிலைகளை கொண்டிருக்கும். 

  1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு
  2. எழுத்துத் தேர்வு
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

TN TRB SGT Recruitment 2024: எழுத்துத் தேர்வு நாள்

தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான TN TRB SGT Recruitment 2024 போட்டித் தேர்வு 23 ஜூன் 2024 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறும்.

இந்த TN TRB SGT Recruitment 2024 போட்டித் தேர்வை TN TET முதல் தாளில் தேர்ச்சிப் பெற்ற தேர்வர்கள் மட்டுமே எழுத முடியும்.

அதன்படி இந்த TN TRB SGT Recruitment 2024 போட்டி தேர்வை எழுதுவதற்கு தமிழ்நாடு முழுவதும் 47,213 பேர் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான செயல்பாடுகள் வேகமாக தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசுப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தகுதியுடைய தேர்வர்கள் இந்த தேர்விற்கு மார்ச் 15-க்குள் மறக்காமல் விண்ணப்பிக்கவும்.

  • Research and Development Team
  • Unlimited Validity Online Login Credential
  • Special Sessions on Banking Industry, handled by field experts
  • Daily Offline Exams
  • Focus on General English Section
  • Night shift / Third Shift Program
  • Fundamental Classes for Non-Maths / English background students
  • ISO 9001: 2008 Certified Coaching Institute
  • Class Room and Practice Hall with ample space
  • Flexibility in Batch Timing
  • Current Affairs Audio Sessions
  • Promotional Exam (JAIIB) Course for Bank Officers (Free for RACE students)
  • Daily Free News Papers
  • RACE Care – A guiding team for all students
  • Pay once and Practice till you get placed
  • Lowest Fee in India

Daily Current Affairs – June 11, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – June 11, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one of the

Read More »

Daily Current Affairs – June 09 & 10, 2024

Share on facebook Share on whatsapp Share on twitter Share on telegram Share on linkedin Share on email Daily Current Affairs – Banking – June 09 & 10, 2024 Dear Banking Aspirants, Prepare for the Daily Current Affairs with Veranda Race who is the pioneer in the Banking Exam Coaching. Current Affairs section is one

Read More »
JOIN BANK CourSe in RACE INSTITUTE TODAY

Take your first step to your DREAM GOVERNMENT JOB

Enquire for Next Batch.